எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 29 April 2015

படித்ததில் பிடித்தவை (நாவிஷ் செந்தில்குமார் கவிதை)


அப்பா குழந்தை விளையாட்டு
“அப்பா குழந்தையாகவும்
குழந்தை அப்பாவாகவும்
நடிக்கிற நாடக விளையாட்டு
ஆரம்பமானது
குழந்தை தன்னை
அப்பாவாகக் காட்டிக்கொள்ள
மீசை வரைந்துகொண்டதுபோல
விரல் சூப்பத் தொடங்கினான்
அப்பா.
சமையற்கட்டிலிருந்து வந்த
அம்மாவைக் கட்டிக்கொண்டு
முத்தமிட்டது
அப்பாவாகிய குழந்தை.
தானும் அணைக்க முயன்ற
அப்பாவியாகிய குழந்தை கண்டு
'ஐயோ... குழந்தை பார்க்கிறது... 
எனத்தள்ளி விட்டாள்
பாத்திரமறியாத அம்மா..!”

              - நாவிஷ் செந்தில்குமார்

No comments:

Post a Comment