“கோடைக்கால
மாலை வெயிலின் நசநசப்பு
எப்படியோ இடம் கிடைத்து
உட்கார்ந்து பயணித்த
பேருந்துப்பயணத்தில்...
எனதருகே குழந்தையுடன்
நின்ற தாய்க்கு எழுந்து
இடம் கொடுக்கலாமா?
என யோசித்த
ஷன நேரத்தில்...
‘குழந்தையை
வைத்துக்கொள்ளுங்கள்...’
என கொடுத்துவிட்டார்.
கொஞ்சமும்
எதிர்பார்க்கவில்லை...
குழந்தையுடன்
இனிமையான பயணம்
அந்த மாலைப்பொழுதில்..!”
- K. அற்புதராஜு.
No comments:
Post a Comment