எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 6 October 2024

படித்ததில் பிடித்தவை (“செல்ஃபி” – ராஜா சந்திரசேகர் கவிதை)


 *செல்ஃபி*

 

மழையில் நனைந்து போகிறவரை

காரில் அமர்ந்திருப்பவர்

படம் எடுக்கிறார்.

 

நனையும் முதுமை என்று

தலைப்பிட்டு

அதை இன்ஸ்டாகிராமில் போடுகிறார்.

 

மனம் எதையோ

குத்திக் கேட்க

நனைந்து போகிறவர்

அருகில் போய்

காரை நிறுத்துகிறார்.

 

அவரை ஏறிக்கொள்ளச்சொல்கிறார்.

கார் நனைந்துவிடும் என்று

அவர் தயக்கம் காட்டுகிறார்.

இதழ்கள் விரிய

ஏற்கனவே கார் நனைந்துகொண்டுதான்

இருக்கிறது எனச்சொல்லி

அவரை ஏற வைக்கிறார்.

 

கார் வைப்பரின் சத்தம்

மழையின் இசைபோல் கேட்கிறது.

பெரியவர் வீடு நெருங்குகிறது.

 

அவரை இறக்கிவிடும்போது

அவர் கண்களில் இருக்கும்

துளிகளைப் பார்க்கிறார்.

பெரியவர் நன்றி சொல்கிறார்.

கைகளைப்பற்றி அதைப்பெற்றுக்கொள்கிறார்.

அவரோடு ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்.

 

பெரியவர் வேகமாய் வீடு நோக்கிப்போக

சற்றுமுன் போட்ட

போஸ்ட்டை டெலிட் செய்கிறார்.

புதிய படத்தைப்போட்டு

அதற்கு ஒரு தலைப்பிடுகிறார்

மழையும் நட்பும்..!”

 

*ராஜா சந்திரசேகர்*



23 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. செல்லதுரை6 October 2024 at 08:48

    🌨️

    ReplyDelete
  3. பிரதிபா6 October 2024 at 09:23

    👌

    ReplyDelete
  4. வெங்கட்ராமன், ஆம்பூர்.6 October 2024 at 09:30

    👍👍💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  5. 🌷💐🌻🍁

    ReplyDelete
  6. கெங்கையா6 October 2024 at 09:44

    கவிதை மிக அருமை
    🙏🙏👌👌

    ReplyDelete
  7. ஆடலரசு6 October 2024 at 12:37

    மனிதம்

    ReplyDelete