எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 14 January 2018

எனது ஆடைகள் துரத்தப்படுகின்றன...


"புதிய வீட்டில்
எனக்கான உடைகளுக்கு
படுக்கை அறையிலிருந்த
பீரோவில் சிறிய இடம்
ஒதுக்கினாள் மனைவி.

பெரிய இடங்களை
பிடித்துக் கொண்டன
மனைவியின்
புடவைகள்.

ஐந்து வருடங்களில்
எனது ஆடைகள்
துரத்தப்பட்டன
பீரோவிலிருந்து
சுவரிலிருந்த அலமாரியின்
சற்றே பெரிய
பகுதிக்குள்.

இரண்டு வருடங்களுக்குள்
அலமாரிக்கும்
படையெடுத்தது
புடவைகள்.
அலமாரியின்
பெரிய பகுதியிலிருந்து
சிறய இடத்துக்கு
மீண்டும் துரத்தப்பட்டன
எனது ஆடைகள்.

மாடியில் புதிதாக
ஒரு அறை கட்டப்பட்டவுடன்
எனது ஆடைகள்
மாடியேறின.

இந்த வருடப் பொங்கலுக்கு
வீட்டை சுத்தம்
செய்த பின்
மாடியேறிவிட்டன
மனைவியின் புடவைகளும்.

எனது ஆடைகளுக்காக
மனைவி தேர்வு செய்த
புதிய இடத்தைப்
பார்க்கவும்
எனது ஆடைகளுக்கு
ஆறுதல் சொல்லவும்
மாடி ஏறிக்கொண்டிருக்கிறேன்
நான்..!"

- கி. அற்புதராஜு.

15 comments:

  1. 😅👌🏻
    Dedicated to pinni.

    ReplyDelete
  2. அருமை

    ReplyDelete
  3. கெங்கையா16 May 2022 at 09:30

    கவிதை மிக அருமை.
    புதிய இடம் கிடைத்ததும்
    தெரிவிக்கவும்.

    ReplyDelete
  4. செளந்தரராஜன். P16 May 2022 at 10:03

    👌👏👏

    ReplyDelete
  5. கலாவதி16 May 2022 at 10:04

    😄😄

    ReplyDelete
  6. ஸ்ரீராம்16 May 2022 at 10:04

    கவிஞரின் அங்கலாய்ப்பு
    மிக அருமை.

    ReplyDelete
  7. வெங்கடபதி16 May 2022 at 11:29

    😂😂😂

    ReplyDelete
  8. அம்மையப்பன்16 May 2022 at 11:30

    🙂

    ReplyDelete
  9. வெங்கட்ராமன், ஆம்பூர்16 May 2022 at 12:20

    😃😃💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  10. ஒவ்வொரு கணவனின் தேடுதல்

    ReplyDelete