எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 27 November 2016

படித்ததில் பிடித்தவை (“ஊற்று” – இளம்பிறை கவிதை)


ஊற்று
“சக்கையாகிப் போன
ஒரு பழைய நினைவின்
இடுக்கிலிருந்து
உருண்டோடி வருகிறது.
*
காடிருந்த நிலத்தின்
வியர்வையாக வழிகிறது.
*
புதையுண்ட
தனிமையின் விதையொன்று
மரமாகி உதிர்க்கும்
முத்து முத்துப் பூக்களாக
உதிர்ந்து கொண்டிருக்கிறது.
மூலம் காண முடியாத
ஆழத் துயரில் ஊற்றெடுத்து
தளும்பிக் கொண்டிருக்கிறது.
*
கால வெறுமையின்
ஊதுகுழல்களால் ஊதப்படும்
சாம்பல் பூத்த கங்குகள் எரிவதில்
பொங்கிப் பொங்கி வழிகிறது.
பசி கொண்ட மலைப்பாம்பாக
காதுமடல்களில் நுழைந்தும்
கழுத்துவரை ஊர்ந்தும்
எதையோ தேடித்தேடி
அலைந்து கொண்டேயிருக்கிறது
என் கண்ணீர்...”

-  இளம்பிறை.

No comments:

Post a Comment