நெற்றிக்கண் திறக்கிறார்
நெல்லையப்பர்
“வந்தது பண்டிகைக் காலம்
வண்ண விளக்குகளால்
மின்னின ரத வீதிகள்.
காண வரும் பக்தர்களுக்காகக்
காத்துக்கொண்டிருந்தார்
நெல்லையப்பர்.
கோவில் வாசல் வளைவு தாண்டிய
கூட்டத்தில் பாதி வலப்பக்கம்
திரும்பி
வடக்கு ரத வீதியில் துணிகளை அள்ள,
மீதியோ
இடப்பக்கம் திரும்பி
இருட்டுக்கடை முன்
அல்வாவுக்காக.
கோபமுற்றாலும்
குளிர்ந்தார் சுவாமி,
கோவிலுக்குள் வந்த
குடும்பம் கண்டு.
‘எல்லா தியேட்டரும் புல்லாயிட்டது...
அதான்
நெல்லையப்பரைப் பார்க்க
வந்துட்டோம்’
அலைபேசியில்
அளவளாவிக்கொண்டே
ஆரத்தி பார்த்த
பக்திமானைக் கண்டு
வெகுண்டெழுந்தார்
வேணுவன ஸ்வாமி.
நெற்றிக்கண் திறக்கப்போன
நெல்லையப்பரின் கோபம் கண்டு
காதில் சொல்கிறாள் காந்திமதியம்மை
‘போகட்டும் விடுங்க... நம்ம
பிள்ளைகள்தானே...’
என்று."
- ஆதர்ஷ்ஜி.
No comments:
Post a Comment