எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 19 February 2019

வைக்க மறந்த கதை...


கல்யாண மண்டபத்தில்
காலை விருந்தில்
காசி அல்வா, பாசந்தி,
பொங்கல், வடை,
ஊத்தப்பம், மசால் தோசை,
இடியாப்பம் - தேங்காய் பால்,
உப்புமா - தயிர்,
இட்லி, பூரி - கிழங்கு...
என அடுத்தடுத்து
அதிரடியாக
கவனிக்கப்பட்டாலும்...

ஏனோ முழுமை பெறாமல்
அன்று முழுவதும்
உறுத்திக் கொண்டிருந்தது...

பரிமாறும் போது
என் இலைக்கு முன்
தீர்ந்துப் போய்,
திரும்பவும் பரிமாறுகையில்
என் இலையில் வைக்க மறந்த
கேரளத்து புட்டு..!
            
                   -  கி. அற்புதராஜு.

2 comments:

  1. நல்ல கவிதை. ஒரு திருமண விருந்து அனுபவம், அடைந்தவற்றை எண்ணி மகிழாமல் கிடைக்காதவற்றை எண்ணி அலைவுறும் மனித வாழ்வின் விசித்திரத்தை சுட்டி நிற்கிறது.

    ReplyDelete