எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 2 May 2018

பூங்காவில் ஒரு மஞ்சள் பூ மரம்


அதிகாலை பூங்காவில்
நடைப் பாதையெங்கும்
இயல் வாகை மரத்தின்
மஞ்சள் பூக்கள்.

இயல்பாகவே
பூக்களை மிதிக்காமல்
நடக்கும் என்னை,
வழக்கமான நடையை
மாற்றி சற்றே
தாண்டி தாண்டி
நடக்க வைத்து
அழகு பார்க்கிறது
அந்த வாகை மரம்.

அடுத்த சுற்றில்
நடக்கும் என்னை
அதிக பூக்களை
விழ வைத்து
சற்றே காய்ந்த
பழைய பூக்களை
மிதிக்கும் நிலைமைக்கு
என்னை தள்ளி விட்டது
அந்த மரம்.

ஒரு வழியாக
அந்த சுற்றில்
மரத்தை கடந்த பின்
சற்றே அதிகமாக
வீசிய காற்றில்
இன்னும் அதிகமாக
பூக்களை உதிர்த்தது
வாகை மரம்.

அதற்கு மேல்
பூங்காவில் நடக்க
விருப்பமின்றி
வெளியேறிய என்னை
தடுக்க முடியாமல்
எனது ஊடலை
அந்த மரம்
ரசித்திருக்கும் போல...

அடுத்த நாள் காலையில்
நான் நடக்கும் பாதையை
அத்தனை சுத்தமாக்கி...
பூக்களை ஓரத்தில் மட்டும்
விழ வைத்து...
சற்றே தென்றலை
வீச வைத்து...
என்னை சமரசம்
செய்தது அந்த
மஞ்சள் பூ மரம்..!

- கி. அற்புதராஜு.

15 comments:

  1. அதற்கு மேல் பூங்காவில் நடக்க விருப்பமின்றி
    வெளியேறிய என்னை..
    நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. வெங்கட்ராமன், ஆம்பூர்1 May 2022 at 06:54

    👌👌💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  3. நீலகண்டன்1 May 2022 at 07:09

    👍

    ReplyDelete
  4. அருமை சமரசம் தென்றல் வாசத்துடனா

    ReplyDelete
  5. சத்தியன்1 May 2022 at 07:40

    👌🏻👌🏻🙏🙏👏👏

    ReplyDelete
  6. ஸ்ரீராம்1 May 2022 at 07:46

    மிக அருமை.

    ReplyDelete
  7. 👌🏻👌🏻

    ReplyDelete
  8. Dr. Ramya Avinash1 May 2022 at 09:05

    Nice. 👍

    ReplyDelete
  9. Very Excellent 💐💐💐🌹🌹

    ReplyDelete
  10. ஸ்ரீகாந்தன்1 May 2022 at 12:19

    👌👍

    ReplyDelete
  11. சீனிவாசன்1 May 2022 at 13:48

    👌👌👌😊

    ReplyDelete
  12. Very nice....👍

    ReplyDelete
  13. சிவபிரகாஷ்2 May 2022 at 19:23

    சூப்பர்.

    ReplyDelete
  14. கலைச்செல்வி6 May 2022 at 17:57

    👌

    ReplyDelete