எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 24 March 2018

படித்ததில் பிடித்தவை (“என் ஒற்றைக் கவிதை” – அ. வெண்ணிலா கவிதை)என் ஒற்றைக் கவிதை
சில நூறு விநாடிகளைப்
பார்த்திருக்கின்றன பூக்கள்.

சில நூறு மாதங்களைக்
கடந்திருக்கின்றன செடிகள்.

சில நூறு ஆண்டுகளை
சுவாசித்திருக்கின்றன மரங்கள்.

பல நூறு தலைமுறைகளை
வாசித்துக் கொண்டிருக்கும் மலைகள்.

பூ, செடி, மரம், மலை
அத்தனையும் புரட்டிப் பார்த்துவிடும்
என் ஒற்றைக் கவிதை.

-    அ. வெண்ணிலா (ஆதியில் சொற்கள் இருந்தன... கவிதை தொகுப்பிலிருந்து.)

No comments:

Post a Comment