எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 7 June 2016

படித்ததில் பிடித்தவை (வரும் வேளை - மனுஷ்யபுத்திரன் கவிதை)


வரும் வேளை...
“நாளைக்கு வரட்டுமா..?”
என்றாள்.

பிறகு
“இல்லை
இன்று மாலையே வருகிறேன்”
என்றாள்.

தாளமாட்டாமல்
“இப்போதே வந்துவிடட்டுமா..?”
என்றாள் தடுமாறிக்கொண்டே...

“இன்னும் சீக்கிரம்
இன்னும் சீக்கிரம்
இக்கணமே கிளம்பி
நீ நேற்றைக்கே வந்துவிட்டால்
என் எல்லா கவலைகளும்
தீர்ந்துவிடும்”
என்றேன்.

-  மனுஷ்யபுத்திரன் (புலரியின் முத்தங்கள்).

No comments:

Post a Comment